கூடலுார்:முதுமலை வனப்பகுதியில், 200 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்க, முதல் கட்ட மாக, 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில், பருவமழையை தொடர்ந்து, தற்போது, அதிகாலையில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் செடிகள், தாவரங்கள் கருகி வருகி வருகின்றன. பகல் நேரத்தில் வெயில் கொளுத்துவதால் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.இதை தடுக்க, முன்னெச்சரிக்கையாக, 200 கி.மீ.,க்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனால், பழங்குடி இன மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.முதுமலை துணை இயக்குனர் செண்பகபிரியா கூறுகையில்,''பனிப்பொழிவு மற்றும் கோடையில் வனத்தீயை தடுக்க முன்னெச்சரிக்கையாக, தீ தடுப்பு கோடுகள் அமைக்க, தேசிய புலிகள் ஆணையம் சார்பில், 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கப்படும்,'' என்றார்.