ஊட்டி:மழை காலங்களில் விவசாய நிலங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.தோட்டக்கலை துறை அறிக்கை:வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயிகள் மலை காய்கறி தோட்டங்களை பாதுகாக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க வேண்டும்.வடிகால் வசதி அற்ற இடங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழை நீர் தேக்கத்தை தவிர்க்க வேண்டும். பசுமைகுடில் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.