ஆஹா, அருமை! 60 ஆண்டு கால 'அத்திக்கடவு கனவு' நனவாகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 நவ
2020
08:51
பதிவு செய்த நாள்
நவ 25,2020 21:35

அன்னூர் : கொங்கு மண்டல மக்களின், 60 ஆண்டுகால கனவு நனவாகிறது. அன்னூரில், 119 ஏக்கர் குளத்திற்கு, அத்திக்கடவு திட்ட குழாய் பதிக்கும் பணி நேற்று நடந்தது.



கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், பல தாலுகாக்கள் மழை குறைவால் வறட்சிக்கு உள்ளாகியுள்ளன. இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கு கீழ் சென்று விட்டது. பருவமழையும் போதுமானதாக இல்லாததால், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிட்டன. பல நூறு ஏக்கர் நிலங்கள், ரியல் எஸ்டேட் பிரமுகர்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இதனால் விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டு, கோவை மற்றும் திருப்பூருக்கு வேலைக்கு செல்கின்றனர். கால்நடை வளர்ப்பும் குறைந்துவிட்டது.



இதற்குத் தீர்வாக பவானி ஆற்றில் உபரியாக சென்று கடலில் கலக்கும் நீரை பயன்படுத்தி, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக பல்வேறு அமைப்புகள், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில், 60 ஆண்டுகளாக போராடி வந்தன.இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. 2018ல் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பணி துவங்கியது. இந்த பணி வருகிற, 2021 டிசம்பரில் முடிவடைய உள்ளது. இத்திட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான ஆயிரத்து 44 நீர்நிலைகள் பயன்பெற உள்ளன.



கோவை மாவட்டத்தில், அன்னூர், சூலூர், எஸ்.எஸ்.குளம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம் என ஐந்து ஒன்றியங்கள் பயன் பெறுகின்றன.குறிப்பாக அன்னூர் ஒன்றியத்தில், 155 குளம், குட்டைகள் பயன்பெறுகின்றன. இத்திட்டத்தில் ஆண்டுக்கு, 1.5 டி.எம்.சி., நீர் குளம் குட்டைகளில் நிரப்பப்பட உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, அன்னூர் ஒன்றியத்தில் குப்பேபாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட சில ஊராட்சிகளில் குளங்களுக்கு மெயின் குழாயிலிருந்து, கிளை குழாய் மூலம் நீர் கொண்டு செல்ல, கிளை குழாய் பதிக்கும் பணி நடந்தது.



இதில் அன்னூரில், ஓதிமலை ரோட்டில், உள்ள, 119 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளத்திற்கு, நீரைக் கொண்டு செல்ல குழாய் பதிக்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக ஓதிமலை ரோட்டில், மன்னீஸ்வரர் கோவில் முன்பு நேற்று போக்குவரத்து தடை செய்யப்பட்டு, வாகனங்கள் தர்மர் கோவில் வீதி வழியாக திருப்பி விடப்பட்டன.ஜேசிபி இயந்திரம் மூலம் ஆறு அடி ஆழத்திற்கு, ஓதிமலை ரோட்டில் குழி தோண்டி, குளத்துக்குள் மழைநீர் செல்லும்படி குழாய் பதிக்கும் பணி நடந்தது.பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பொங்கியண்ணன் மற்றும் அத்திக்கடவு திட்ட பொறியாளர்கள் இப்பணியை பார்வையிட்டனர்.



அன்னூர் தாலுகாவில், காட்டம்பட்டிக்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் உள்ள 119 ஏக்கர் குளத்திற்கு நீர் செல்ல குழாய் பதிக்கும் பணி நேற்று துவங்கியதை அடுத்து விவசாயிகள், ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் குழாய் பதிக்கும் இடத்தில் திரண்டனர். இதேபோல் இந்தத் திட்டத்தில் ஆறு இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அன்னூர் அருகே குன்னத்தூராம்பாளையத்தில், 6வது நீரேற்று நிலையம் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.'கடையடைப்பு, பாதயாத்திரை, மொட்டை அடிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதம் என 60 ஆண்டுகாலம் போராடியது வீண் போகவில்லை' என மகிழ்ச்சியுடன் திட்ட ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X