திருப்பூர் : இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் விடுமுறை எடுத்து பங்கேற்கும் ஆசிரியர் விபரத்தை அனுப்பி வைக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் வட்டார கல்வி அலுவலர், அரசு துவக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:இன்று தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கூடாது என அரசு எச்சரித்துள்ளது. உத்தரவை மீறி பங்கேற்பவர் குறித்த விபரத்தை காலை, 9:30 மணிக்குள் மாவட்ட கல்வித்துறை பார்வைக்கு தாமதமின்றி அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.