ஊட்டி : வானிலை ஆய்வு மையம் 'நிவர்' புயல் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
40 பேரிடர் சிறப்பு குழுக்கள்; 456 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று மழையின் தாக்கம் இல்லாத காரணத்தால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படவில்லை. மக்கள் நிம்மதி அடைந்தனர்.