கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் நடக்கும், ஹெத்தைஅம்மன் திருவிழாவை, நடப்பாண்டு மிக எளிமையாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் குலதெய்வமான, ஹெத்தையம்மன் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு, கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, 'செங்கோல்' பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கூடுவதை தவிர்க்கும் விதமாக, மிக எளிமையாக கொண்டாட திருவிழா நடைபெறும் அனைத்து கிராமங்களிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஊட்டி அருகே, பேரார் பகுதியில், ஹெத்தை பண்டிகைக்காக, விரதமிருக்கும் பக்தர்கள் கொதுமுடி கிராமத்திற்கு நடந்து சென்றனர்.
வரும், 29ஆம் தேதி 'சக்கலாத்தி' பண்டிகையை முன்னிட்டு, ஹெத்தையம்மன் செங்கோல் பக்தர்கள் விரதம் மேற்கொள்ளும் நிலையில், நடப்பாண்டு 'கத்திகை' நிகழ்ச்சியில் பூசாரிகள் மட்டுமே பங்கேற்கின்றனர்.சம்பிரதாய படி, அருள்வாக்கு நடக்கிறது. ஆனால், பக்தர்கள் பங்கேற்பதில்லை. அன்னதானம் தவிர்க்கப்படுகிறது. ஜன., முதல் வாரத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாவும் நடப்பாண்டு மிகமிக எளிமையாக நடத்தப்படுகிறது.