மஞ்சூர் : மேல் குந்தா, அட்டு மண்ணு கிராமத்தின் அடிப்படை தேவை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே மேல் குந்தா ஊராட்சிக்கு உட்பட்ட அட்டு மண்ணு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் போஜன் குந்தா தாசில்தாருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கிராமத்தின் அடிப்படை தேவைகள் குறித்து மனு அனுப்பியுள்ளார்.மனுவில், 'கடந்த, 40 ஆண்டுகளாக அட்டு மண்ணு கிராமத்தில் திறந்த நிலையில் இருக்கும் கழிவுநீர் சாக்கடைகளால் சுகாதார சீர்கேடு; பாழடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கும் பொது சமுதாய கூடம்; கிராமத்தில் நடை பாதை வசதியில்லை; சாலையை விரிவுபடுத்த நிதி ஒதுக்கவில்லை,' என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு. பிரச்னைக்களுக்கு இதுவரை தீர்வு காணப்படாதது குறித்தும் கேள்விஎழுப்பப்பட்டுள்ளது.