கோவை : கோவையிலிருந்து சென்னை, கடலுார், புதுச்சேரி, தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக இயக்கப்படும் ஆம்னி பஸ்கள், புயலையொட்டி நேற்று நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனால் கோவை- சத்தி சாலையிலுள்ள ஆம்னிபஸ் ஸ்டாண்ட் நிரம்பி வழிந்தது. காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலை, பாரதிபார்க் பகுதியிலுள்ள சாலை, சத்தி சாலையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறின்றி, ஆம்னிபஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'சென்னைக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் நிலைமையை கேட்டறிந்து, அதற்கேற்ப இயக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர்.