கோவை : கோவையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 179 பேர், நேற்று ஒரே நாளில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் புதிதாக, 149 பேருக்கு கொரோனா தொற்று தெரியவந்துள்ளது. மொத்த பாதிப்பு, 47 ஆயிரத்து 975 ஆக உயர்ந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 70 மற்றும் 76 வயது முதியவர்கள் நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த, 179 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை, 46 ஆயிரத்து 693 ஆக உயர்ந்தது. தற்போது, 679 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.