கோவை : 'நிவர்' புயல் காரணமாக கோவை, சென்னை இடையே செல்லும் சிறப்பு ரயில்கள் அனைத்தும், இன்று ரத்து செய்யப்படுவதாக, சேலம்கோட்ட தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கோவை வரும் சிறப்பு ரயில்கள் (எண்கள், 02675, 06027, 02680) மற்றும் கோவையில் இருந்து சென்னை செல்லும் சிறப்பு ரயில்கள் (எண்கள் 02676, 02678, 02679 அனைத்தும் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.