வெள்ளகோவில் : வெள்ளகோவில், முத்தூர் ரோட்டில் மின்சார வாரிய அலுவலகத்துக்கு எதிரில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.இவ்வாறு, நடுரோட்டில், வீணாகும் குடிநீரை இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் குடங்களில் சேகரித்து எடுத்து செல்கின்றனர். ரோட்டில், வேகமாக வரும் வாகனங்களினால் தங்கள் மீது மோதி விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சமின்றி, பெண்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.எனவே, காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக, நகராட்சி நிர்வாகத்தினர் சீரமைக்க வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.