பெண்ணுக்கு கொலை மிரட்டல் பனியன் தொழிலாளி கைது | திருப்பூர் செய்திகள் | Dinamalar
பெண்ணுக்கு கொலை மிரட்டல் பனியன் தொழிலாளி கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 நவ
2020
22:55

திருப்பூர் : வீட்டை காலி செய்ய வலியுறுத்திய இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பனியன் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர், இந்திரா நகர், அணைப்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி சசிகலா, 27. இவரது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், சசிகலா கவனித்து வந்தார். செந்தில்குமாருக்கு சொந்தமான, நான்கு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.அதில், பனியன் தொழிலாளியான சங்கர், 44 என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். சரியாக வாடகை கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால், வீட்டை காலி செய்ய சசிகலா கூறியதால், அவரிடம் தகராறு செய்தார்.கடந்த, 31ம் தேதி மீண்டும் இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. அப்போது, சசிகலாவை, தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் சங்கரை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X