திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், குண்டடம் - முத்துக்கவுண்டன்பாளையம் அருகே, 520 மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நடும் இலக்கை, வெற்றிகரமாக பூர்த்தி செய்ய, திட்டமிட்டு செயலாற்றி வருகின்றனர். டிச., மாத இறுதிக்குள், மாவட்டத்தில், 10 லட்சம் மரக்கன்றுகளை நட்ட சாதனையை அடைய உள்ளது, வெற்றி அமைப்பு.'வனத்துக்குள் திருப்பூர் -6' திட்டத்தில், இரண்டு லட்சம் என்ற இலக்குடன் துவங்கிய பயணம், 1.80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்துள்ளது. ஆறாவது திட்டத்தின், 77 வது நிகழ்ச்சி, குண்டடம் முத்துக்கவுண்டன்பாளையத்தில் நேற்று நடந்தது.
தோட்ட உரிமையாளர் சதாசிவம், ஆறுமுகம் குடும்பத்தினரும், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினரும், மரக்கன்று நடவு பணியை துவக்கி வைத்தனர். தான்றிக்காய், ஆவி, இலுப்பை, பியன், நாட்டுப்பலா, தேக்கு, கடம்பு, நாட்டு அத்தி, நாவல் என, 520 மரக்கன்றுகள் நடப்பட்டன.