திருப்பூர் : தாராபுரத்தில் டூவீலரை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம், தொப்பம்பட்டி, மடத்துப்புதுாரை சேர்ந்தவர் செல்வகுமார், 29. இவர் தாராபுரம் தாலுகா அலுவலகம் அருகே உள்ள நாகம்மா தேவி கோவிலுக்கு டூவீலரில் சென்றார். சாமி கும்பிட்டு விட்டு திரும்பி சென்ற போது, டூவீலர் மாயமானது. இதுகுறித்து புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் விசாரித்தனர். அதில், சீதா நகரை சேர்ந்த ஆரோன் பாபு, 19, டூவீலர் திருடியது தெரிந்ததால், அவரை கைது செய்து, டூவீலரை மீட்டனர்.