கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24,112 ஆக அதிகரித்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் உத்திரபிரதேசத்தில் இருந்து திரும்பிய நபர் 1, நோய் அறிகுறியுடன் 7, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 23 என மொத்தம் 31 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24,112 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 23,730 ஆக அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் இதுவரை 4,01,946 பேருக்கு பரிசோதனை செய்ததில், 24,112 பேருக்கு தொற்று உறுதியானது. 3,77,366 பேருக்கு தொற்று இல்லை. 468 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 86 பேர் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று இறப்பு ஏதும் இல்லை. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 275 ஆக உள்ளது.