சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் வடிகால் வசதி ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரசம்பட்டு கிராமம் 3வது வார்டில் வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:00 மணியளவில் சங்கராபுரம் - அரசம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் திருமால் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 8:30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.