விழுப்புரம்: 'நிவர்' புயலின் தாக்கத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் உள்ள 1,500 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.'நிவர்' புயலையொட்டி, கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்பதால் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மேலும், மரக்காணம், கோட்டக்குப்பம் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் கடற்கரையோர கிராமங்களில் உள்ள 1,500 பேர் அங்கிருந்து நேற்று வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு மையங்களாக உள்ள பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.