மீனவர்கள் உதவித் தொகை வழங்க கோரிக்கை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மீனவர்கள் உதவித் தொகை வழங்க கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 நவ
2020
00:47

மரக்காணம்: மரக்காணம் அடுத்த கைப்பாணிக்குப்பத்தில் திண்டிவனம் எம்.எல்.ஏ., விடம் மீனவர்கள் ரூ. 10 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.



மரக்காணம் பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்படும் மீனவ கிராமங்களை திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம் பார்வையிட்டார். அப்போது கைப்பாணிக்குப்பம் மீனவர்களை எம்.எல்.ஏ., சந்தித்தபோது, மீனவர்கள் வீட்டிலிருந்து புயல் பாதுகாப்பு மையத்திற்கு வரவேண்டும் என கூறினார். அதற்கு மீனவர்கள் நாங்கள் கடந்த ஐந்து நாட்களாக கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்லவில்லை, மேலும் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடிக்க 15 நாட்கள் ஆகும் இதனால் அரசிடம் கூறி 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கவேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டனர்.மேலும் புயல் பாதுகாப்பு மையத்தில் வருவாய்துறை சார்பில் உணவு ஏற்பாடுகள் எதுவும் செய்து தரவில்லை அதனால் நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம் என கூறினர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X