விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக மரக்காணத்தில் 37.50 மி.மீ., மழையளவு பதிவானது.'நிவர்' புயலின் தாக்கத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 6:00 மணிவரை பெய்த மழையளவு விபரம்:விழுப்புரம் 12.50 மி.மீ., கோலியனுார் 10.10, வளவனுார் 15, கெடார் 2, முண்டியம்பாக்கம் 4, நேமூர் 3, கஞ்சனுார் 3, சூரப்பட்டு 2, வானுார் 18, திண்டிவனம் 16.70, மரக்காணம் 37.50, செஞ்சி 5, செம்மேடு 9, வல்லம் 11, அவலுார்பேட்டை 3, வளத்தி 6.40, மணம்பூண்டி 2, முகையூர் 4, திருவெண்ணெய்நல்லுார் 2 மி.மீ., மழை பதிவானது.மாவட்டத்தில் மொத்தம் 166.20 மி.மீ., மழை பதிவாகியது. இதன் சராசரி 7.91 மி.மீ., ஆகும்.