விழுப்புரம்: புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 85பேர் தயார் நிலையில் உள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு அரக்கோணத்திலிருந்து 44 பேர் கொண்ட மீட்பு படையினர் திண்டிவனத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 41 பேர் நேற்று திண்டிவனம் வந்தனர். இரு படையினரும் கடலோர கிராம பகுதிகளில் மீட்பு உபகரணங்களுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.