விழுப்புரம்: நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று மாலை 5.00 மணிக்கு மூடப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், நிவர் புயல் காரணமாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. புயல் முன்னெச்சரிக்கையாக கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி நேற்று கடைகள் மூடப்பட்டிருந்தது.டாஸ்மாக் கடைகள் தினந்தோறும் பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயங்குகிறது. புயல் காரணமாக நேற்று காலை முதல் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று மாலை 5:00 மணிக்கு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.