திண்டிவனம்: 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை காரணமாக திண்டிவனத்தில் 3,661 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில், திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க திண்டிவனம் தாசில்தார் செல்வம் தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நேற்று மாலை வரை மின் நகர், மேல் ஆதனுார், குன்னப்பாக்கம், கம்பூர், கொடிமா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 738 குழந்தைகள் உட்பட 3,661 பேரை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
இவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ., பார்வைதிண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவிற் குட்பட்ட பகுதிகளில் 2,176 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கைப்பாணிக்குப்பம், வசவங்குப்பம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட பகுதி முகாம்களை சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., பார்வையிட்டார்.