விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 14,532 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 14,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 110 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 132 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர், மரக்காணம் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் உட்பட 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 14,532 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, நோயில் இருந்து குணமடைந்த 14,270 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.