கடலுார்:வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வீராணம் ஏரிக்கு, கீழணையில் இருந்து, 10 நாட்களாக தண்ணீர் வருகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் துவங்கி, இதுவரை, மூன்று முறை வீராணம் ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக, கீழணையில் இருந்து, வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரை, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக திருப்பி விட்டதில், வாலாஜா ஏரி மற்றும் பெருமாள் ஏரிகள் நிரம்பின. இரு தினங்களாக, 'நிவர்' புயல் காரணமாக, மழை பெய்து வருகிறது.இதனால், வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூதங்குடி வீனஸ் மதகு வழியாக, நேற்று, 1,500 கன அடி முதல், 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.