திருப்பூர் : திருப்பூரில், பாலிடெக்னிக் மாணவர் துாக்குமாட்டி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் கே.வி.ஆர்., நகர், புவனேஸ்வர் நகரை சேர்ந்தவர் அஸ்வின், 19; பெருந்துறை தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வந்தார். ஒற்றைத்தலைவலி காரணமாக கடந்த, இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.இதனால், மனமுடைந்த, அஸ்வின் இரு நாட்களுக்கு முன், கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.வீடு திரும்பியதும் தன் அறையில் துாக்குமாட்டி இறந்தார். இது குறித்து, சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.