கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை, இளங்கலை மாணவர் சேர்க்கையில், பொதுப்பிரிவினருக்கு ஆன்லைன் கலந்தாய்வு இன்று துவங்கி, டிச.,1 வரை நடைபெறுகிறது.வேளாண் பல்கலையில்இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு இடஒதுக்கீடு கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. டிச., 1 வரை இணையவழியில் நடக்கிறது. நவ., 30 காலை முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கும், மதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடும், டிச.,1 காலை சிறந்த விளையாட்டுவீரர்களுக்கும், மதியம் தொழில்முறைக்கல்வி பாடப்பிரிவுகளுக்கு இச்சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது.டிச., 2ல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு, இணையதளம் வாயிலாக அறிவிக்கப்படும். மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், மாணவர்கள் பதிவு செய்த இ-மெயில் மற்றும் மொபைல் எண் வாயிலாக தெரிவிக்கப்படும்.அனைத்து விபரங்களையும், https://tnauonline.in என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.