ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 12 ஆயிரத்து 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று புதிதாக, 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. பிற மாவட்ட பாதிப்பையும் சேர்த்து, மொத்த எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 123 என உயர்ந்தது. இதில், 11 ஆயிரத்து, 685 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 299 பேர் மட்டும் சிகிச்சையை தொடர்கின்றனர். இதுவரை, 139 பேர் இறந்துள்ளனர்.