ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம், கட்ட பொம்மன் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 58. பி.ஆர்.எம். என்ற பெயரில் சாயப்பட்டறை நடத்தி வந்தார். சிறிது காலமாக, வாங்கிய கடனை திருப்பி செலுத்த வழியின்றி தவித்து வந்தார். தினமும் கொடுத்த கடன் தொகையை கேட்டு, பலரும் வீடு வந்து சென்றனர். இந்நிலையில் கடந்த, 13 காலை, 5:00 மணிக்கு பட்டறைக்கு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மகன் பிரதீஸ்வர், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.