அந்தியூர்: அந்தியூர் அருகே, கூத்தம்பூண்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 53; நேற்று மதியம், 12:15 மணியளவில், இவரது தோட்டத்தில் இருந்த, நான்கு லோடு வைக்கேல்போரை அந்த வழியாக சென்ற மர்மநபர் தீ வைத்துவிட்டார். இதனால், வைக்கோல்போர் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அந்தியூர் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மாடுகளுக்கு தீனி போடுவதற்காக வைத்திருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நான்கு லோடு வைக்கோல்போர் முற்றிலும் எரிந்து சாம்பலானது.