மொடக்குறிச்சி: அரச்சலூர் அடுத்த, நாகராஜபுரத்தை சேர்ந்த செல்வராஜ், நாகமலை அருகே தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது, 16 வயது மகள், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த, 15ல், வீட்டிலிருந்த மாணவி மாயமானார். மகள் மாயமானது குறித்து, அரச்சலூர் போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். அதில், அரச்சலூர் அருகே தச்சங்காட்டுவலசை சேர்ந்த கூலித்தொழிலாளி மூர்த்தி, 32, என்பவர் என் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என, சந்தேகம் தெரிவித்து, மகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுத்த போலீசார், காணாமல் போன பள்ளி மாணவியை, மூர்த்தியிடமிருந்து மீட்டு, விசாரணை நடத்தினர். அதில், மாணவியை கடத்தியதாக ஒப்புக்கொண்டதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.