அரூர்: அரூரில், 'நிவர்' புயல் குறித்து பொதுமக்களுக்கு, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. வங்கக்கடலில் உருவாகிய, 'நிவர்' புயலால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், அதிக கனமழையும், தர்மபுரி மாவட்டத்தில், கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்ட, கோட்டப்பட்டி, சிக்களூர், பெரியப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங் மற்றும் அரூரில், 'நிவர்' புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில், நேற்று காலை, தண்டோரா மூலம், புயல் பாதிப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, தேவையில்லாமல், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம். கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில், கட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டது.