அஞ்சல் அலுவலகங்களில் கட்டணமின்றி ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
அஞ்சல் அலுவலகங்களில் கட்டணமின்றி ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 நவ
2020
10:03

கிருஷ்ணகிரி: அஞ்சல் அலுவலகங்களில் கட்டணமின்றி, ஆதார் அட்டையில் திருத்தம் செய்யலாம் என, கிருஷ்ணகிரி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி, தலைமை அஞ்சல் அலுவலகம், பர்கூர், தேன்கனிக்கோட்டை, எலத்தகிரி, மத்திகிரி, ஓசூர் சிப்காட், ஓசூர், கல்லாவி, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், கெலமங்கலம், கிருஷ்ணகிரி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், மத்தூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி, சிங்காரப்பேட்டை, தளி, ஊத்தங்கரை, வரட்டனப்பள்ளி, வேப்பனஹள்ளி ஆகிய அஞ்சல் அலுவலகங்களில், ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக, ஆதார் அட்டை எடுக்க விரும்புவோர் மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய விரும்புவோர், மேலே குறிப்பிட்டுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம். புதிய ஆதார் அட்டை பதிவுக்கு கட்டணம் இல்லை. ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள, 50 ரூபாயும், கண் விழி, புகைப்படம் மற்றும் கைரேகை திருத்தம் செய்ய, 100 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்பட ஏதேனும் ஒன்றை கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு குழந்தையின், ஐந்தாவது வயதில், கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். 15 வயதில் அவற்றை புதுப்பிக்கவும் வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X