கடவூர்: 'கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்க, இன்று கடைசி நாளாகும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசு ஆண்டுதோறும், கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. இந்த விருதிற்கான விண்ணப்பங்கள், கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இன்றுக்குள் (26ம் தேதி) மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு, தேவையான ஆவணங்களுடன், வைத்து மூன்று நகல்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.