மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பு; விலை குறைவால் விவசாயிகள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2020
10:26

கரூர்: மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


கரூர் மாவட்டத்தில், காவிரியாற்று பகுதிகளான நொய்யல், வேட்டமங்கலம், புன்னம், ஓலப்பாளையம், ஒரம்புபாளையம், நல்லி கோவில், வேலாயும்பாளையம், புகளூர், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், என். புதூர், கடம்பங்குறிச்சி, நெரூர், சோமூர் மற்றும் கிருஷ்ணராயபுரம், குளித்லை வட்டார பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும், மரவள்ளி கிழங்கு, இடைத்தரகர்கள் மூலம் வாங்கப்பட்டு நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள, ஜவ்வரிசி ஆலைகளுக்கும், மாநிலம் முழுவதும் சிப்ஸ் தயாரிக்கவும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த வாரம் ஒரு டன் மரவள்ளி கிழங்கு, 6,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 5,500 ரூபாயாக குறைந்து விட்டது.


இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகரித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், ஒரே நேரத்தில் அறுவடை தொடங்கியுள்ளதால், வரத்து அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு ஜவ்வரிசியை அனுப்ப முடியவில்லை. இதனால், ஜவ்வரிசி ஆலைகளில், உற்பத்தி குறைவால், மரவள்ளிக் கிழங்குக்கு விலை குறைந்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X