குளித்தலை: குளித்தலை அடுத்த, வைகைநல்லூர் பஞ்., மேல மையிலாடி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராஜலிங்கம், 42. இவரது மகள் துர்கா, 20. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி. இவர், கடந்த ஏழு வருடங்களாக சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த, 23 மதியம், 12:00 மணியளவில் வீட்டின் பின்பக்கமாக சென்றவர், வெகு நேரமாகியும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று காலை, வடக்கு மைலாடியில் உள்ள விவசாயியின் கிணற்றில் சடலமாக அவர் மீட்கப்பட்டார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.