குளித்தலை: குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையை சேர்ந்த சரோஜா மகள் அம்சவள்ளி, 26. கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்தபோது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரை காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. செந்தில், கோவையில் கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தீபாவளிக்கு வந்தவர், திரும்ப கோவைக்கு செல்வதாக சொன்னதாக தெரிகிறது. இதுகுறித்து, இருவருக்கும் நேற்று முன்தினம் வாய் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, செந்தில் கடை வீதிக்கு சென்று விட்டார். திரும்ப வந்து பார்த்த போது, அம்சவள்ளி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டு படுகாயத்துடன் இருந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அன்று இரவு உயிரிழந்தார். குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.