கரூர்: கரூர் அருகே, மருத்துவநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கிய நிலையில் இருக்கும். சேறும், சகதியுமாக இருப்பதால், டூவீலர்களில் கூட செல்ல முடியாது. இதுகுறித்து, பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. மருத்துவ நகர் பகுகளில் வடிகால் வசதிகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.