கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை முருகன் கோவில் அருகில், சாலையில் பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். கரூர்- திருச்சி நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரம் முருகன் கோவில் அருகில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில், காவிரி குடிநீர் குழாய் இருப்பதால் அடிக்கடி தண்ணீர் வீணாகிறது. இதனால், சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். ஆகையால் இந்த பள்ளத்தை சரி செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.