கரூர்: பவித்திரம் அருகே, பழுதான மின் விளக்குகளை சரி செய்ய வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் அருகில் பூபாளியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. சாலையில் மின் விளக்குகள் பழுதடைந்து சரி வர எரிவது இல்லை. பல்வேறு பணிகளுக்காக வெளியில் சென்று இரவில் திரும்பும் மக்கள், வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ என அஞ்சுகின்றனர். மின் விளக்கை சீரமைக்க வேண்டி பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் முன் வந்து பஞ்., முழுவதும் உள்ள தெரு விளக்குகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.