குளித்தலை: குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள, 1,700க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. குளித்தலை, மாயனூர் காவிரியில் இருந்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளுக்கு, குழாய்கள் மூலம், குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குளித்தலை- மணப்பாறை சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில், பல்வேறு இடங்களில், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இந்நிலையில், சிவாயம் தெற்கு பஞ்.. தேசியமங்கலத்தில் சின்னயம்பாளையம் பிரிவு சாலை அருகே, குழாய் உடைந்து குடிநீர் வீணாகியது. பலமுறை புகார் அளித்தபிறகு அது சரி செய்யப்பட்டது. இப்பகுதியில் இதுபோல் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.