சீலா மீன் சீசன் துவங்கியும் விலை இல்லாததால் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
00:46

சாயல்குடி : சாயல்குடி கடல் பகுதியில் சீலா மீன் சீசன் துவங்கியும் விலை இல்லாததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



சாயல்குடி அருகே வாலிநோக்கம், கீழமுந்தல், மேலமுந்தல், மாரியூர், மூக்கையூர், ரோஜ்மா நகர் பகுதிகளில் சீலா மீன் சீசன் நவ., முதல் வாரம் முதல் துவங்கியுள்ளது.இங்கு பிடிக்கப்படும் 5 முதல் 20 கிலோ வரையிலான சீலா மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக துாத்துக்குடி துறைமுகம் செல்வது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த அளவே மீனவர்களிடம் இருந்து எடுக்கின்றனர். மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.



மீனவர் ஒருவர் கூறியதாவது:மன்னார் வளைகுடா கடல்பகுதியில் பிடிபடும் சீலா மீன்கள் அதிக ருசி வாய்ந்தவை. அசைவ பிரியர்களால் விரும்பி வாங்கப்படுகிறது. இங்கிருந்து மீன் வியாபாரிகளால் வேன்கள் மூலம் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகர்பகுதிகளுக்கு செல்கிறது. மழைகாலம் துவங்கி விட்டாலே, கண்டிப்பாக சீலா மீன்களின் வரத்து அதிகளவு இருக்கும்.



கடலுக்குள் பெய்யும் மழையால் அதிகளவு மீனினங்களின் வளர்ச்சிக்கு உதவும்.சீலா மீன்கள் தற்போது கிலோ ரூ.400 முதல் 700 வரை விற்கப்படுகிறது.கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு வரத்து அதிகம் இருந்தாலும், விலைகுறைவால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X