பரமக்குடி : பரமக்குடி ஆர்ச் தொடங்கி காந்திசிலை வரை மழையால் ரோடு சேதமடைந்ததையடுத்து, துாசி மண்டலமாக மாறி வருகிறது.
பரமக்குடியில் கடந்த சில நாட்களாக பரவலாகபலத்த மழை பெய்கிறது. நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மழைநீர் வழிந்தோடவழியின்றி வாறுகால் குறுகலாக உள்ளது. இத்துடன் வாறுகாலையொட்டி கட்டட படிகளை கட்டி வைப்பதால் தண்ணீர் வழிந்தோட பல மணி நேரம் ஆகிறது.இதனால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி ரோடுகள் பெயர்ந்து உள்ளது.
பரமக்குடி நகரில் ஆர்ச் பகுதியில் கமிஷன் கடைகள், லாரி செட்கள் அதிகளவில் உள்ளன. இதனால் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்று வரும் சூழலில் துாசி மண்டலமாக அப்பகுதி முழுவதும் மாறுகிறது. இத்தெருவில் துணி, ேஹாட்டல், வீட்டு உபயோகப்பொருள் என கடை வைத்திருப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
மேலும் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பல்லாங்குழி ரோடுகளால் சறுக்கி விழும் நிலை உள்ளது. ஆகவே ரோட்டை உயர்ந்தி அமைப்பதுடன், தண்ணீர் வழிந்தோட வசதியாக ஆக்கிரமிப்புகளை சீர் செய்ய நகராட்சி அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.