ராமநாதபுரம் : திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகளில் பிரதமரின் புதிய பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரத்தில் வேளாண்துறை மூலம் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடுதிட்டத்தில் 1,89,071 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விவசாயிகள் பதிவு செய்யும் பணி நடக்கிறது.எக்ககுடியில் வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பொது இ-சேவை மையம், உத்திரகோசமங்கை நெல்விதை சுத்திகரிப்பு, ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.