கடலுார் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2020
00:55

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், 'நிகர்' புயல், மழை பாதிப்புகளை முதல்வர், பழனிசாமி., ஆய்வு செய்தார். மழையால் விவசாய பயிர்களை பார்வையிட்ட முதல்வர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.



'நிவர்' புயல் காரணமாக, கடலுாரில், 24ம் தேதி நள்ளிரவு முதல் மழை பெய்யத் துவங்கியது. 25ம் தேதி காலை, அதிதீவிர புயலாக மாறியதால், மழையின் வேகமும் அதிகரித்தது. நேரம் செல்ல செல்ல புயலின் பாதை மாறி, புதுச்சேரி நோக்கி நகர்ந்தது. இரவு, 11:30 மணிஅளவில், மரக்காணம் அருகே கரையை கடந்தது. இதனால், கடலுார் மாவட்டத்திற்கு வர இருந்த ஆபத்து நீங்கி, மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



ஆயினும், புயல் கரையை கடக்க துவங்கியதும், கடலுாரில், 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்றுடன், கன மழை கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.தேசிய நெடுஞ்சாலை உட்பட பல இடங்களில், 321 மரங்கள், வேரோடு சாய்ந்தன. 77 மின் கம்பங்கள், ஐந்து டிரான்ஸ்பார்மர்கள் முறிந்து விழுந்தன. 12 கால்நடைகள் இறந்தன.



21 கூரை வீடுகள் முற்றிலும் சேதமாகின. நெல், வாழை, மணிலா உள்ளிட்ட விவசாய பயிர்கள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சேதமாயின.இ.பி.எஸ்., வருகைகடலுார் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று பார்வையிட்டார். மாலை, 2:30 மணிக்கு கடலுார் அடுத்த கீழ் குமாரமங்கலம் கிராமத்திற்கு வந்தார். சூறைக்காற்றில் சேதமான வாழை மரங்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.



மாவட்டத்தில் வாழை, நெல், மணிலா, மரவள்ளி போன்ற பயிர் சாகுபடி விபரங்கள், பாதிப்பு எவ்வளவு என, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பாதிப்பு குறித்து, உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.அடுத்து, கடற்கரை கிராமமான தேவனாம்பட்டினம் சென்று, நகராட்சி பள்ளி முகாமில் தங்கியுள்ளவர்களிடம் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா, போதிய வசதிகள் உள்ளதா என கேட்டார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்தார்.



முகாமில் தங்கிஉள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் மருந்து பெட்டகம் வழங்கினார். மீன்பிடி துறைமுகம்பின், கடலுார் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று, நிறுத்தி வைத்திருந்த படகுகளை பார்வையிட்டு, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, மாவட்டத்தில் புயல் மழை சேதங்கள் குறித்து, கடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



தமிழக தொழில் துறை அமைச்சர் சம்பத், தலைமைச் செயலர் சண்முகம், வேளாண் துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.புயல் பாதிப்பு ஏற்பட்ட, 24 மணி நேரத்திற்குள், முதல்வர் நேரடியாக களத்தில் இறங்கி சேதங்களை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறியது, மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



கடல் மைல் விபரம் கேட்டார்





கடலுார் துறைமுகத்தில் ஆய்வு செய்த முதல்வர் இ.பி.எஸ்., அங்கிருந்த மீனவர்களிடம், மாவட்டத்தில் விசைப் படகுகள், பைபர் படகுகள் விபரம், எத்தனை மைல் துாரம் சென்று மீன் பிடிப்பீர்கள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.அப்போது, கடலில் நாட்டிக்கல் மைல் என்று கணக்கிட்டு செல்வோம் என, மீனவர்கள் தெரிவித்தனர். குறுக்கிட்ட முதல்வர், ஒரு நாட்டிக்கல் மைல் என்றால் எத்தனை கி.மீ., என்றார். அருகில் இருந்த கலெக்டர், 1.8 கி.மீ., என பதிலளித்தார்.

இந்த விபரங்களை தான் அறிந்து கொள்வதற்காக கேட்டதாக, முதல்வர் கூறினார்.


புதுச்சேரி பாதிப்பு: முதல்வர் நாராயணசாமி ஆய்வு





புதுச்சேரியில் இரண்டு நாட்களாக இரவு, பகலாக இடைவிடாமல் தொடர்ந்த கன மழையால், நகரம் மட்டுமல்லாமல், கிராமங்களும் வெள்ளக்காடாக மாறின. பல இடங்களில், வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். நேற்று காலை மழை ஓய்ந்த போதும், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில், தண்ணீர் வடியாமல் குளம் போல தேங்கி நின்றது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று, முதல்வர் நாராயணசாமி பார்வையிட்டார்.



பின், அவர் கூறியதாவது:'நிவர்' புயல் காரணமாக, புதுச்சேரியில் வரலாறு காணாத அளவிற்கு கன மழை பெய்துள்ளது. கிராமப்புற பகுதிகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. புதுச்சேரியில் மழை நீரை, கடல் உள்வாங்கவில்லை. உயிர் சேதம் இல்லை. மக்கள் வீட்டில் இருந்ததால் பாதிப்பு இல்லை. 144 தடையுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், விளை நிலங்கள், வீடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நிவாரணம் வழங்குவது குறித்து, முடிவெடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.



நாகையில் திரும்பியது இயல்பு நிலை





'நிவர்' புயல் எச்சரிக்கையால், கடற்கரை மாவட்டமான நாகை மாவட்ட மக்கள், அச்சத்துடன் வீடுகளில் முடங்கினர். நேற்று முன்தினம் காலை முதல் பெய்ய துவங்கிய மழை, நள்ளிரவு வரை பெய்தது. நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில், நிவர் புயல் கரையை கடந்ததால், துறைமுகத்தில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது. புயல் அபாயம் நீங்கியதால், நாகை மாவட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.



மூழ்கியது உப்பளம்





விடிய, விடிய கன மழை பெய்ததால், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பக்கிங் ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உப்பு உற்பத்தி செய்யும் கழுவெளியை கடல் நீர் சூழ்ந்துள்ளது. மேலும் மரக்காணம் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கந்தாடு கிராமத்தில் இருந்து கானிமேடு வழியாக மண்டகப்பட்டு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில், புளிய மரம் விழுந்ததால் மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X