கிணத்துக்கடவுகிணத்துக்கடவு மேற்கு பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் வெள்ளை ஈக்கள் அதிகளவில் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு மேற்கு பகுதிகளான வடபுதுார், குதிரையாலாம்பாளையம், பொட்டையாண்டிபுரம்பு, சொக்கனுார் உட்பட பல கிராமங்களில் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன.இதில், வெள்ளை ஈக்கள் தாக்கம் அதிகம் உள்ளதால், வேளாண்மைத்துறை சார்பில் மஞ்சள் ஒட்டுப்பொறி தென்னை மரங்களுக்கு இடையே கட்டியும், தென்னை மட்டையின் அடியே தங்கியுள்ள ஈக்களை கட்டுப்படுத்த, தண்ணீர் பீய்ச்சியடைக்கப்பட்டும் வருகிறது. ஆனால், வெள்ளை ஈக்கள் குறைந்தளவே கட்டுப்படுகிறது.இந்த பருவ சூழலில், வெள்ளை ஈக்கள் அதிகளவில் இனப்பெருக்கம் அடைந்துள்ளது.விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் அட்டையில் குறைந்தளவு ஈக்கள் மட்டுமே ஒட்டுகின்றன. முழுமையாக கட்டுப்படுவதில்லை.விவசாயிகள் கூறுகையில், 'வெயில் அடிக்கும்போது, வெள்ளை ஈக்கள் இனப்பெருக்கம் குறைவாக உள்ளது. வானம் மேக மூட்டமாக காணப்படும் நிலையில் வெள்ளை ஈக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த வேளாண்மை துறையால் வழங்கப்பட்ட மஞ்சள் ஒட்டுப்பொறியில், 10 சதவீதம் வெள்ளை ஈக்கள் மட்டுமே கட்டுப்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாற்று கட்டுப்பாடு முறைகளை கையாள வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும்,' என்றனர்.