கோத்தகிரி;போக்குவரத்து நிறைந்த கோத்தகிரி பஸ் நிலையத்தில் அடிக்கடி, வாகன நெரிசல் ஏற்படுகிறது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகும், கோத்தகிரியில் இருந்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு இயக்கப்படும் சில பஸ்கள், பஸ் நிலையம் சாலையை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், கிராமப்புறங்களில் இருந்து வரும் தனியார் வாகனங்களை 'பார்க்கிங்' செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தவிர, சமீபத்தில் பெய்த மழையில், பஸ் நிலையம் பகுதியில் பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து மண் மற்றும் இடிபாடுகள் வாகனம் நிறுத்தத்தில் கொட்டப்பட்டு, அகற்றப்படாமல் உள்ளது.இதனால், குறிப்பிட்ட பகுதியிலும் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளதால், அவ்வப்போது நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், தனியார் வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்வது அவசியம்.