கிருஷ்ணகிரி:மர்மமான முறையில் ஏழு பசுமாடுகள் இறந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெள்ளாளம்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன் 55 விவசாயி; இவருக்கு சொந்தமான மூன்று பசு மாடுகளை நேற்று மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். வீட்டுக்கு பிடித்து வர சென்றபோது அவை இறந்து கிடந்தன.இதேபோல் காசி என்பவரின் ஒரு பசுமாடு ராமச்சந்திரனின் இரண்டு பசுமாடுகள் கலைமணியின் ஒரு மாடு என நொச்சிப்பட்டியில் ஏழு பசுமாடுகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.
ஊத்தங்கரை கால்நடை மருத்துவமனை மருத்து குழு மாடுகளின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.கால்நடை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.