திருச்செங்கோடு:திருச்செங்கோடு சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் லட்சக்கணக்கான ரூபாய் சிக்கியது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. பத்திரப்பதிவுக்கு பல்வேறு வகைகளில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் டி.எஸ்.பி. விஜய்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அலுவலக ஊழியர்கள் எழுத்தர் உதவியாளர்கள் உள்ளிட்ட 25 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. நள்ளிரவு வரை சோதனை விசாரணை நீடித்தது.