முதுகுளத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துாரிலிருந்து மு.சாலை வழியாக சடையனேரி செல்லும் வழியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
முதுகுளத்துாரில் இருந்து மு.சாலை வழியாக சடையனேரி செல்லும் தார்ச்சாலை பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. சாலையை மராமத்து செய்யாததால் குண்டும்குழியுமாக இருந்தது. ரூ.71 லட்சத்தில் புதிய தார்ச்சாலை அமைக்கும்பணி துவங்கியது.பணி மந்தமாக நடைபெறுவதால் கடந்த 12 நாட்களுக்கு மேலாக சாலையில் ஜல்லிகற்கள் மட்டும் பரப்பி வைத்துஇருப்பதால் வாகனஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து தார்ச்சாலை அமைக்கும் தீவிரமாக நடந்து வருகிறது. சாலை பணி நடைபெறுவதால் சாலையில் வாகனஓட்டிகள் பூக்குளம்கிராமத்தின் வழியாக செல்கின்றனர்.