திருவாடானை : திருவாடானை அருகே கற்களத்துார் கண்மாயிலிருந்து பெண் மான் மேய கரைக்கு வந்தது. நாய்கள் துரத்தியதால் குடியிருப்பு பகுதிக்குள்நுழைந்த மான் கம்பி வேலியில் சிக்கியது. திருவாடானை தீயணைப்புநிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் சென்ற வீரர்கள் மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மானுக்கு சிகிச்சை அளிக்கபட்டு அஞ்சுகோட்டை கண்மாய்க்குள் மான் விடப்பட்டது.